Home /News /entertainment /

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கானுடன் நடிக்கும் நயன்தாரா!

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கானுடன் நடிக்கும் நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

சல்மான்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடிக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஹைதராபாத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். மோகன்லால் நடித்த வேடத்தை சிரஞ்சீவியும் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் நயன்தாராவும் நடிக்கின்றனர். மோகன்ராஜா இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் முதிர்ச்சியுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர் வில்லனாக வரும் விவேக் ஓபராயின் மனைவியாக நடித்து இருந்தார்.

இதையும் படிங்க.. லட்சுமிக்கு உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா... அடுத்த கட்டத்துக்கு நகரும் பாரதி கண்ணம்மா!

அவருக்கு முதல் கணவர் மூலம் டீன் ஏஜ் வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் காட்டப்பட்டு இருந்தது. அதனால் இந்த வேடத்தை நயன்தாரா தெலுங்கில் செய்யமாட்டார் என்று பலரும் கூறி வந்தனர். அவரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர் சிரஞ்சீவியும் மோகன் ராஜாவும்.இந்தத் திரைப்படத்தில் சல்மான்கான் கௌரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை சென்ற வாரம் படக்குழுவும் உறுதி செய்திருந்தது. ஆனால் எந்த வேடத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க.. மீண்டும் ரசிகர்களை குழப்பும் அமீர் -பாவ்னி.. அந்த ஃபோட்டோவுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு!

சல்மான்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடிக்கவும் திட்டமிட்டிருப்பதாக ஹைதராபாத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதன்மூலம் ஒரே நேரத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. நயன்தாரா நடிப்பில் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் விரைவில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் கோல்டு திரைப்படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். இவை தவிர தமிழில் கனெக்ட் என்ற ஹாரர் படத்திலும் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கும் படமொன்றிலும் அவர் நடித்து வருகிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Nayanthara

அடுத்த செய்தி