ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக்கான் படத்திலிருந்து விலகும் நயன்தாரா?

ஷாருக்கான் படத்திலிருந்து விலகும் நயன்தாரா?

நயன்தாரா

நயன்தாரா

ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருக்கிறார் ஷாருக்கான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் ஷாருக்கானின் படத்திலிருந்து, நடிகை நயன்தாரா விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியவர் தொடர்ந்து மெர்சல், பிகில் என ஹாட்ரிக் அடித்தார்.

தற்போது அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து, இந்தியில் படம் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதானார். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருக்கும் ஷாருக்கான், படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

இதனால் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதையடுத்து கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால், அந்தப் படத்திலிருந்து விலக நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தவிர, அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல், ஜி.எஸ்.விக்னேஷ் படம், யுவராஜ் தயாளன் படம், சிரஞ்சீவியின் காட் ஃபாதர் படம், மலையாளத்தில் கோல்டு ஆகியப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Nayanthara