ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nayanthara: மாதவனுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

Nayanthara: மாதவனுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

நயன்தாரா - மாதவன்

நயன்தாரா - மாதவன்

இந்த படம் ஜனவரி 2023-ல் தொடங்கும் என்றும், மாதவனும் நயன்தாராவும் திரையில் ஜோடியாக வருவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகை நயன்தாரா நடிகர் மாதவனுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    நடிகை நயன்தாரா தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அவர் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் இந்த சிறப்பு நாளைக் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை வெளியுலகிற்கு அறிவிப்பதற்கு முன்பு, கைவசம் இருந்த அனைத்துப் படங்களையும் முடித்தார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தனது முதல் பாலிவுட் முதல் படமான ‘ஜவான்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

    'ஜவான்' படத்திற்குப் பிறகு, நயன்தாரா தனது இரு மகன்களுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதால், சிறிது இடைவெளிக்குப் பிறகு வேலைக்குத் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சஷிகாந்த் இயக்கும் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நயன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை இல்லை.

    அமெரிக்க ரசிகரை நெகிழச் செய்த விஜய்!

    இந்த படம் ஜனவரி 2023-ல் தொடங்கும் என்றும், மாதவனும் நயன்தாராவும் திரையில் ஜோடியாக வருவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. ‘ஆயுத எழுத்து’ படத்திற்குப் பிறகு சித்தார்த் மற்றும் மாதவன் மீண்டும் இணையும் படம் இது.

    தவிர, ’கனெக்ட்' மற்றும் 'இறைவன்' ஆகியப் படங்களின் வெளியீட்டிற்காக நயன்தாரா காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara