Home /News /entertainment /

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா!

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

பர்சனல் பக்கங்களினால் தமிழ் சினிமா நயன்தாராவை தவறவிட்டது.

    ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என தமிழ் சினிமா கொண்டாடும் கனவு தேவதை நயன்தாரா. இவரின் திரைப்பயணம் குறித்த பதிவு. 

    கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்ததை மாற்றி கதாநாயகியின் பெயராலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை நிரூபித்த மாயக்காரி நயன்தாரா. கொளுக் மொழுக் கன்னங்களோடு சரத்குமாரோடு ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்த திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடி ஆனார் நயன்தாரா. அதுமுதல் ’கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ கொஞ்சி பேசிய சந்திரமுகியின் நயன்தாராவை கொஞ்சி பேச தயாராயினர் தமிழகத்து ரசிகர்கள்

    ஜெய்சங்கரின் பணிவினால் கிடைத்த நாயகன் வாய்ப்பு!

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’ இவருக்கு வேறொரு அடையாளத்தை தேடிக்கொடுத்தது. தயாரிப்பாளர்கள்.. இயக்குனர்கள். கதாநாயகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாரா என்றானது. ‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’, ‘தலைமகன்’, ‘ஈ’, ‘பில்லா’, ‘சத்யம்’, ‘ஏகன்’, ‘வில்லு’ என வரிசையாக அக்காலகட்டத்தில் நயன்தாராவின் ராஜ்ஜியமே.

    அஜித்தின் நயன்தாரா பில்லாவில் ஒரு ஹாலிவுட் நாயகி போல் அவதாரமெடுத்ததை பார்த்து மிரண்டு கிறங்கி தவித்தது தமிழ் சினிமா. அவரின் ‘சிக்’ என்ற உடல்வாகு தமிழகத்து பெண்களையும் அவர் மீது காதல் கொள்ள செய்தது. ’எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்’ என பார்வையாளர்களை ஏங்க வைத்தது. தனுஷுடன் இவர் நடித்த ’யாரடி நீ மோகினி’. அடுத்து அஜீத், விஜய், சூர்யாவின் ஏகன், வில்லு, ஆதவன் திரைப்படங்கள் நயன்தாராவால் வண்ணமாகி ‘வாராயோ வாராயோ மோனாலிசா’ என வெல்வெட் கம்பளம் விரித்தது தமிழ் சினிமா.

    cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!

    2010 ஆம் ஆண்டுக்கு பின் அவரது பர்சனல் பக்கங்களினால் தமிழ் சினிமா நயன்தாராவை தவறவிட்டது. ஒரு பீனிக்ஸ் பறவையென மூன்று வருடம் கழித்து ராஜா ராணியாய் வெற்றிவாகை சூடி பின்பு’ தனி ஒருவன்’ மூலம் தமிழ் சினிமாவின் தனி ஒருத்தி ஆனார் நயன்தாரா. . ‘ராஜா ராணி’ திரைப்படம் இவரை மாடர்ன் இளைஞர்களின் மன வானின் ராணியாக்கியது.

    நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’மாயா’ திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. ரசிகர்களோ இவருக்கு கட் அவுட் வைக்க தமிழ் சினிமாவோ இவரை லேடி சூப்பர் ஸ்டாராக்கியது. காதம்பரியாக ’நானும் ரவுடிதான்’… மற்றும் சோலோ ஹீரோயினாக இவர் நடித்த ‘டோரா’, ‘அறம்’ ,'ஐரா' ‘கோலமாவு கோகிலா’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ போன்ற திரைப்படங்கள் இவரை மீண்டும் நம்பர் ஒன் நாயகியாக்கி காத்துவாக்குல காதல் புரிந்த இவரை வாழ்த்தியது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Nayanthara, Tamil Cinema

    அடுத்த செய்தி