Home /News /entertainment /

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நயன்தாரா

நயன்தாரா

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

நயன்தாரா நடித்துள்ள ஆக்ஸிஜன் (O2) படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்துள்ளது.

உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனை குறிக்கும் O2 அறிவியல் பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

கடந்த ஆண்டில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.

இதையும் படிங்க - கீர்த்தி சுரேஷ் - செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிகாயிதம்... படம் எப்படி இருக்கு?

இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் O2 வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்துள்ளது.





நயன்தாரா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இதனை பிரபல இயக்குனரும், ஜெயன் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க - எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான 'கடமையை செய்' ட்ரெய்லர் ரிலீஸ்... சிம்பு வெளியிட்டார்... 

முதன்முறையாக தெலுங்கில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதை தவிர்த்து, கோல்டு, கனெக்ட், அஜித் 62 உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
Published by:Musthak
First published:

Tags: Actress Nayantara

அடுத்த செய்தி