Home /News /entertainment /

‘ஓ2 திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா உயிர் கொடுத்துள்ளார்’ : அறிமுக இயக்குனர் விக்னேஷ் புகழாரம்…

‘ஓ2 திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா உயிர் கொடுத்துள்ளார்’ : அறிமுக இயக்குனர் விக்னேஷ் புகழாரம்…

O2 படத்தில் நயன்தாரா

O2 படத்தில் நயன்தாரா

O2 Movie Nayanthara : வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஓ2 திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.

    ஓ2 (O2) திரைப்படத்திற்கு  நடிகை நயன்தாரா உயிர் (Oxygen) கொடுத்துள்ளார் என அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் கூறியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடித்திருக்கும் O2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்து இருக்கிறார்.

    ஒரு பேருந்து எதிர்பாராதவிதமாக நிகழும் இயற்கை மாற்றத்தால் பூமிக்கடியில் மாட்டிக்கொள்கிறது.  அந்த பேருந்தில் இருக்கும் பயணிகளும்,  வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகனுடன் நயன்தாராவும் மாட்டிக் கொள்கின்றனர்.

    இதையும் படிங்க - ‘ஹெல்மெட் போடாவிட்டால் ஜவான் பட ஷாரூக்கான் நிலைமைதான் வரும்’ – வைரலாகும் காவல்துறை பதிவு

    அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்ற அடிப்படையில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.  இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    அதில் பேசிய இயக்குனர் விக்னேஷ்,  தன்னுடைய திரை பயணத்திற்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பெரும் உதவியாக இருந்தனர் என கூறினார்.

    ஓ2 திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உடலாக இருந்தார் என குறிப்பிட்டார். அதேபோல் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்திற்கு கொடுத்து உயிர் (Oxygen) கொடுத்தார் என பேசினார். பெண்களுக்கும் சாதித்த பெண்களுக்கும், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கும்,  சமர்ப்பிப்பதாக பெருமிதம் கொண்டார்.

    இதையும் படிங்க - சரத்குமாரிடம் தளபதி 66 அப்டேட்டை இனிமேல் யாரும் கேட்க மாட்டார்கள்!! அப்படியொரு பதில்…

    இவரைத் தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.பிரபுவிடம் படத்தின் டீசர் வெளியானதும் அதில் இடம்பெற்ற காட்சிகளை கொண்டு ஹாலிவுட் படத்தின் சாயல் இருப்பதாக விமர்சனம் எழுந்ததைப் பற்றி   நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.



    இதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ரசிகர்கள் உலக அளவிலான திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓ2 ட்ரெய்லரைப் பார்க்க...



    தென் இந்தியாவில் வருடத்திற்கு 800 திரைப்படங்கள் வெளியாகின்றன.  அதேபோல் இந்திய அளவில் ஆயிரத்து 600க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் எந்த ஒரு காட்சியும், ஏதாவது ஒரு படத்தில் பார்த்தது போன்ற உணர்வு இருக்கின்றது. நாங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறோம், எந்த சர்வதேச திரைப்படத்தின் சாயலும் இந்த திரைப்படத்தில் இருக்காது என தெரிவித்தார்.  வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஓ2 திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Nayanthara

    அடுத்த செய்தி