Home /News /entertainment /

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 படத்தின் டீசர் வெளியீடு…

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 படத்தின் டீசர் வெளியீடு…

ஓ2 படத்தில் நயன்தாரா

ஓ2 படத்தில் நயன்தாரா

நயன்தாரா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டாரில் வெளியிடப்படவுள்ளது.

உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனை குறிக்கும் O2 அறிவியல் பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இதையும் படிங்க - ‘சலார் படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்வேன்’ – பிரபாஸ் ரசிகர் மிரட்டல்

கடந்த ஆண்டில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.  இதன் தொடர்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் O2 வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்திருந்தது.

இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.



டீசரை பார்க்க....



நயன்தாரா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் சிரஞ்சீவியின் காட் ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இதனை பிரபல இயக்குனரும், ஜெயன் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

முதன்முறையாக தெலுங்கில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதை தவிர்த்து, கோல்டு, கனெக்ட், அஜித் 62 உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

 
Published by:Musthak
First published:

Tags: Actress Nayantara

அடுத்த செய்தி