நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி - ‘மூக்குத்தி அம்மன்’ முதல் போஸ்டர் ரிலீஸ்

நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி - ‘மூக்குத்தி அம்மன்’ முதல் போஸ்டர் ரிலீஸ்
நயன்தாரா
  • News18
  • Last Updated: November 10, 2019, 6:59 PM IST
  • Share this:
நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி நடித்த படம் எல்.கே.ஜி. இந்தப் படத்தை பிரபு இயக்கியிருந்தார். அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்தப் படத்தை அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்துக்கான கதையை எழுதியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை என்.ஜே.சரவணன் இயக்குகிறார்.


ஏற்கெனவே நானும் ரவுடி தான், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நயன்தாராவுடன் நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இந்நிலையில் இந்தப் படத்தின் கதையில் தனக்கு முக்கியத்துவம் இருப்பதால் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்