Home /News /entertainment /

CONNECT - நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் புதிய ஹாரர் படம்!

CONNECT - நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் புதிய ஹாரர் படம்!

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் ரவுடி பிக்சர்ஸே தயாரித்து வருகிறது. இதில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா, சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘கனெக்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ். இதன் தயாரிப்பில் நெற்றிக்கண் படம் இந்த வருடம் வெளியானது. கொரிய பிளைன்ட் படத்தின் தமிழ் தழுவல் இது. நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களை கவரவில்லை. அதேநேரம், படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டதால் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு லம்பாக லாபம் கிடைத்தது.

இதனையடுத்து கனெக்ட் என்ற படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நயன்தாராதான் நாயகி. உடன் அனுபம் கேர், சத்யராஜ் நடிக்கிறார்கள். நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். அஸ்வினின் மாயா, கேம் ஓவர் படங்களைப் போல இதுவும் ஹாரர் படமாக தயாராகிறது.



நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் ரவுடி பிக்சர்ஸே தயாரித்து வருகிறது. இதில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கின்றனர். இதுதவிர கவின் நடிப்பில் ஊர்குருவி என்ற படத்தையும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Also read... வெளியானது ஆர்யாவின் புதிய படத்தின் பெயர்...!

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கூழாங்கல் மற்றும் வசந்த் ரவி நடித்திருக்கும் ராக்கி படங்களையும் ரவுடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இவ்விரு படங்கள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமலிருப்பது முக்கியமானது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara

அடுத்த செய்தி