• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆஸ்கர் செல்லும் , நயன்தாராவின் கூழாங்கல் படம்

ஆஸ்கர் செல்லும் , நயன்தாராவின் கூழாங்கல் படம்

கூழாங்கல்

கூழாங்கல்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழில் தயாராகியிருக்கும் கூழாங்கல் திரைப்படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 14 முக்கிய படங்களில் இந்தப் படத்தை தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கூழாங்கல் திரைப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தை தயாரித்தவர்கள் என நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பெயர் இடம்பெறுகிறது

இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜும், அவரது நண்பர்களும் இணைந்து எடுத்தப் படமே கூழாங்கல். படம் தயாரான பிறகு படத்தைப் பார்த்த இயக்குனர் ராம் வியந்துபோய் விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். எடுத்தப் படத்தை வெளியிடுவதற்கோ, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவோ பொருளாதார பின்புலம் இயக்குனருக்கும் அவரது நண்பர்களுக்கும் இல்லை.

Also read... மாநாடு படத்தைப் பார்த்த பிறகு எஸ்.ஜே.சூர்யா போட்ட அதிரடி ட்வீட்!

இந்த நேரத்தில் படத்தைப் பார்த்த விக்னேஷ் சிவனுக்கு படம் பிடித்துப்போக, சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்புகிற செலவை ஏற்றுக் கொண்டார். வெளிநாடுகளில் படம் விருதுகளை வெல்ல, அப்படியே மொத்தப் படத்தையும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: