ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பில்லா படத்தில் கவர்ச்சியாக நடிக்கக் காரணம்... மனம் திறந்த நயன்தாரா!

பில்லா படத்தில் கவர்ச்சியாக நடிக்கக் காரணம்... மனம் திறந்த நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. முழுக்க முழுக்க கிளாமர் அண்ட் ஸ்டைலிஷாக அதுவரை யாருமே என்னை பார்த்ததில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பில்லா படத்தில் கவர்ச்சியாக நடிக்கக் காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதை விளம்பரப்படுத்தும் நோக்கில், தொகுப்பாளினி டிடி-யுடனான உரையாடலில் கலந்துக் கொண்டார் நயன்.

அப்போது, சிவகாசி, சிவாஜி ஆகியப் படங்களில் ஒருபாடலுக்கு நடனமாடியது குறித்து கேட்டதற்கு, “ஒரு பாடலுக்கு நடனமாடுவது உங்கள் இமேஜுக்கு சரியாக இருக்காது. அப்புறம் பாடலுக்கு மட்டும் தான் கூப்பிடுவார்கள் என்றார்கள். அதற்கு, எதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதால் தானே ஸ்பெஷல் பாடலுக்காக கூப்பிடுகிறார்கள், அது நல்லா தான் இருக்கும். நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன்” என்றார் நயன்தாரா.

' isDesktop="true" id="860087" youtubeid="Wbq2kiiARiw" category="cinema">

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு... சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

பிறகு, பில்லா படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ”பில்லா படம் பண்ணும் போது எனது இயக்குநர் விஷ்ணுவர்தனை தவிர, யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. முழுக்க முழுக்க கிளாமர் அண்ட் ஸ்டைலிஷாக அதுவரை யாருமே என்னை பார்த்ததில்லை. அந்த நேரம் வில்லேஜ் மாதிரியான நிறைய ஹோம்லி கேரக்டர்களில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது விஷ்ணு தான் என் மீது நம்பிக்கை வைத்தார், அவரின் மனைவியும் டிசைனருமான அனுவும் என்னை அதிகம் நம்பினார். அவங்களோட ஸ்டைலிங் தான் நிறைய வித்தியாசப்படுத்தி காட்டியது. இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் என்னால் கிளாமராக நடிக்க முடிந்தது” என்றார் நயன்தாரா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara