• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘நான் பேசுறது கேக்குதா’.. கனெக்ட் படத்தின் சவுண்ட் ஸ்டோரியை வெளியிட்ட படக்குழு..

‘நான் பேசுறது கேக்குதா’.. கனெக்ட் படத்தின் சவுண்ட் ஸ்டோரியை வெளியிட்ட படக்குழு..

நயன்தாரா

நயன்தாரா

Nayanthara New Movie Connect : கனெக்ட் படத்தின் சவுண்ட் ஸ்டோரி வெளியாகிவுள்ளது.

  • Share this:
    நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் காத்து வாக்குல இரண்டு காதல் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடித்து வருகின்றனர்.மேலும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்னேஷ், சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

    காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது.சமந்தாவின் பெயர் கதிஜா என்றும், நயன் தாராவின் பெயர் கண்மணி என்றும், விஜய் சேதுபதியின் பெயர் ராம்போ என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு காத்து வாக்குல இரண்டு காதல் படக்குழுவோடு நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.அப்போது சமந்தா மற்றும் விஜய் சேதுபதியும் உடனிருந்தனர்.


      also read : தங்கமே ! நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள்..

    நயன் தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.இந்த படத்தின் பெயர் ‘கனெக்ட்’. ஹாரர் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சதய்ராஜ் மற்றும் ஹிந்தி நடிகர் அனுப்பம் ஹெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளனர். இந்த படத்தையும் விக்னேஷ் சிவனே தயாரிக்க உள்ளார்.


    தற்போது கனெக்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் ‘சவுண்ட் ஸ்டோரியை’ படக்குழு வெளியிட்டுள்ளது.இதை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: