Nayanthara: நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ இத்தனை கோடி வியாபாரமா?

நயன்தாரா

2011-ல் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ஓடிடி உரிமை 25 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவுக்கு ரசிகர்கள் உள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி அவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா தற்போது நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடிக்கிறார். இதில் நெற்றிக்கண் நாயகி மையப்படம். இதில் நயன்தாரா கண் பார்வையற்றவராக வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2011-ல் தென்கொரியாவில் வெளியான Blind திரைப்படத்தை தழுவி நெற்றிக்கண் படம் எடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் பார்வையை இழக்கும் பெண் போலீஸ் அதிகாரி எப்படி ஒரு சைக்கோ கொலைகாரனை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை. அதனை நயன்தாரா நடிப்பில் மிலிந்த் ராய் இயக்க, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

    கொரோனா சூழல் நிலவி வருவதால், கடந்தாண்டு முதல் திரைப்படங்கள் பெரும்பாலும் ஓடிடி-யை நோக்கி படையெடுக்கின்றன. தற்போது தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கூட நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படமும் ஓடிடி-யில் வெளியாகிறதாம். அங்கு படத்தில் உரிமம் 25 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: