'தளபதி 63' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் இதுதான்!

கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் விஜய்க்கு இணையாக நாயகி நயன்தாராவிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

news18
Updated: June 21, 2019, 1:53 PM IST
'தளபதி 63' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் இதுதான்!
நயன்தாரா மற்றும் விஜய்
news18
Updated: June 21, 2019, 1:53 PM IST

தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி நயன்தாராவின் பெயர் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Also see... ‘தளபதி 63’ படத்தில் விஜய் பெயர் என்ன தெரியுமா?

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கு மைக்கேல் என்று படத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. மேலும் மகனாக நடிக்கும் விஜயின் பெயர் 'பிகில்' என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

இதனை தொடர்ந்து தற்போது தளபதி 63 படத்தில் நயன்தாராவின் பெயர் ஏஞ்சல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் விஜய்க்கு இணையாக நாயகி நயன்தாராவிற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also see...

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...