
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் ஓட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

திருமண விழாவின் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும் மீடியாக்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர்.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த காவலர்களை நிறுத்தி உள்ளனர்.

மேலும் இந்த விழாவிற்காக காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு திருமண விழாவின் உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் விடுதிக்கும் அருகில் இருக்கக்கூடிய சாலைகளிலும் இடங்களிலும் யாரையும் அனுமதிக்கக் கூடாது என தனியார் பாதுகாப்பு காவலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

திருமணத்திற்கு வரும் நட்சத்திரங்களின் தொலைபேசிகள் வாங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கின்றனர்.

அழைப்பிதழில் உள்ள Bar Code களை ஸ்கேன் செய்தால் மட்டுமே உள்ள செல்ல முடியும் என கூறப்படுகிறது.
[caption id="attachment_756380" align="alignnone" width="4624"]

விடுதிக்கு பின்புறம் இருக்கும் கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் நிற்க கூடாது என நிர்ப்பந்த கின்றனர்.
[/caption]

திருமண விழாவை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகக் கூடாது என நிர்ப்பந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக கடற்கரைக்கு செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.