Home /News /entertainment /

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: முதல் சீசனாக விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: முதல் சீசனாக விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது!

நயன்தாரா - விக்னேஷ்

நயன்தாரா - விக்னேஷ்

Nayanthara marriage video : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு முதல் சீசனாக விரைவில் Netflix  தளத்தில் வெளியாகிறது. 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில்  Netflix தளத்தில் வெளியாக உள்ளன. 

தமிழ் திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  அவர்களின் திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதற்காக பல உடன்படிக்கைகள் இருதரப்பிலும் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் புகைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில்,  குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வெளியிட வேண்டும் என கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை குறித்த ஆவணப்படம்!

அதன்படி வெகு சில புகைப்படங்கள் மட்டுமே இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.  இந்த நிலையில் Netflix தளத்தின் ஒப்பந்தத்தை விக்னேஷ் சிவன் மீறிவிட்டார் என தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர் எனவும் செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதை விக்னேஷ் சிவன் தரப்பினர் மறுத்துள்ளனர். அத்துடன் நயன்தாரா -  விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு முதல் சீசனாக விரைவில் வெளியாகும் எனவும் அவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு தெரிவித்துள்ளனர்.

மறுபடியும் அஜித் படத்தை கமெண்ட் செய்து பேச்சு.. ஸ்ரீநிதிக்கு என்னதான் ஆச்சு?

அதில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அடுத்த சீசன்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதில் நயன்தாராவின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.  அதற்கான படப்பிடிப்பை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். அத்துடன் ஒப்பந்தம் ரத்து என வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Nayanthara, Tamil Cinema, Vignesh Shivan

அடுத்த செய்தி