• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: இப்போதைக்கு கல்யாணம் இல்ல - வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா!

Nayanthara: இப்போதைக்கு கல்யாணம் இல்ல - வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சமந்தாவை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் வெப் சீரிஸில் களம் இறங்கியிருக்கிறார்.

    தற்போதைய சூழலில் சினிமாவைப் போலவே வெப் சீரிஸ்களும் படு பிரபலமாகி வருகின்றன. ஹாலிவுட் மற்றும் வட இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் மட்டுமே வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்த நிலையில் தற்போது தமிழின் முன்னணி நடிகை நயன்தாராவும் வெப் சீரிஸ்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இதற்கு 'Baahubali before the beginning' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    தவிர தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘நெற்றிக்கண்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அடுத்து படங்களில் ஒப்பந்தமாவாரா அல்லது திருமணம் செய்துக் கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வெப் சீரிஸில் நடிக்கும் விஷயம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: