Nayanthara: நயன்தாரா போலவே மேக்கப்! இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகும் படம்!

நயன்தாரா

நயன்தாரா போலவே ஒப்பனை செய்த, விஷாஸ்ரீ என்பவரின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது.

  • Share this:
    நயன்தாராவை போலவே ஒப்பனை செய்திருக்கும் ஒரு பெண்ணின் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

    உலகில் ஒருவரைப் போல 7 பேர் இருக்கலாம் என்பார்கள். அதிலும் சமூக வலைதளங்கள் பெருகிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான நபர்களை எளிதில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா உருவத்தில் ஒரு பெண் டிக்டாக்கில் கவனம் ஈர்த்தார்.

    இந்நிலையில் நடிகை நயன்தாரா போலவே மேக்கப் மூலம் தனது தோற்றத்தை மாற்றியிருக்கும் பெண் ஒருவரின் படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா தனது அசாத்திய நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளார். அவருக்குப் பின் எத்தனையோ நடிகைகள் வந்தாலும், 15 வருடங்களுக்கும் மேலாக நிலைத்து நின்று இளம் நடிகைகளுக்கு பெரிய சவாலாக இருக்கிறார்.

    இதற்கிடையே அச்சு அசலாக நயன்தாரா போலவே ஒப்பனை செய்த, விஷாஸ்ரீ என்பவரின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. மேக்கப் ஆர்டிஸ்ட் கண்ணன் என்பவர் நயன்தாராவின் தோற்றத்தை மறு உருவாக்கம் செய்திருந்தார். மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவின் தோற்றம் விஷாஸ்ரீக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. இந்நிலையில் அந்தப் படங்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: