ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

கனெக்ட் டீசர் அறிவிப்பு போஸ்டரில் நயன்தாரா

கனெக்ட் டீசர் அறிவிப்பு போஸ்டரில் நயன்தாரா

இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாராவை முன்னிலைப்படுத்தி வெளியான மாயா திரைப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கி அறிமுகமானார். அதன் பின் டாப்ஸி நடித்த கேம் ஓவர், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இரவாக்காலம் ஆகிய படங்களை இயக்கினார்.

அதில் கேம் ஓவர் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றி அடைந்தது. ஆனால் இரவாக்காலம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய முதல் நாயகியான நயன்தாரா நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் அஸ்வின் சரவணன்.

கனெக்ட் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் டீசரை 18 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

உதயநிதி பற்றி புகழ்ந்து பேசிய நடிகை நிதி அகர்வால்...

இந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த காட் ஃபாதர் திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முக்கியமான கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார்.

கிளாஸி லுக்கில் மெளனி ராய்... லைக்ஸை குவிக்கும் படங்கள்!

ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் அட்லியின் ஜவான் படத்திலும் நயன்தாரா இடம்பெற்றிருக்கிறார். இதற்கிடையே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது வாடகைத் தாய் இரட்டைக் குழந்தைகளை அறிவித்திருந்தனர். இதுதொடர்பான சட்ட சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். இதில் நயன்தாரா இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by:Musthak
First published:

Tags: Nayanthara