ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vignesh shivan : நயன்தாராவை கல்யாணம் செய்ய போகும் விக்கி உண்மையில் இப்படிப்பட்டவரா?

Vignesh shivan : நயன்தாராவை கல்யாணம் செய்ய போகும் விக்கி உண்மையில் இப்படிப்பட்டவரா?

நயன் - விக்கி

நயன் - விக்கி

nayanthara husband vignesh shivan: மூத்த நடிகை குட்டி பத்மினி, நயன்தாரா பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கி விட்டன. இணையத்தில் இவர்கள் திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாளைய தினம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ள நயன் - விக்கி கல்யாணத்திற்கு திரைபிரபலங்கள் வருகை தரவுள்ளன. அதே போல் கல்யாணத்தில் ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை எனவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லேடி சூப்பர் ஸ்டாரை மணமுடிக்கவுள்ள இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்த தேடல்களும் இணையத்தில் அதிகமாகியுள்ளது.

  போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கிய விக்கியின் ரியல் லைஃப் கேரக்டரை இதுவரை பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் பிரபலங்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் விக்கியுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் விக்கி போல் ஒரு அற்புதமான மனிஷனை எங்கும் காண முடியாது என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

  நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்..

  குறிப்பாக நானும் ரவுடி தான் படத்தில் விக்கியின் இயக்கத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் ஒருமுறை அவரை பற்றி பேசுகையில், “நல்ல விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அற்புத படைப்பாளி,நல்ல ரசிகன், நல்ல கலைஞன் இதை எல்லாம் தாண்டிய நல்ல மனிதன். அதனால் தான் அவரை ஒரு சாதனை பெண் உருக உருக காதலிக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

  இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்

  அதேபோல் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கலா மாஸ்டர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் புரமோஷன் பேட்டியில், விக்கி - நயன் பற்றி பேசிய கலா மாஸ்டர், ”முதல் முறையாக விக்கியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதி நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். மிகச் சிறந்த மனிதர். மரியாதையாக பேசுவார். அவரின் படத்தில் நடிக்க நயன்தாரா என்னை கேட்ட போது ஆரம்பத்தில் தயங்கினேன். பின்பு முதல் நாள் ஷூட்டிங்கில் அக்கா, அக்கா என அவ்வளவு பாசமாக சொந்த அக்காவை போல் விக்கி என்னை உணர வைத்தார்” என்று பதிவு செய்துள்ளார்.

  ' isDesktop="true" id="756042" youtubeid="hjDxRTU7Q3o" category="cinema">

  மூத்த நடிகை, குட்டி பத்மினி நயன்தாரா பற்றி பேட்டி ஒன்றில் பேசுகையில், நயன் விக்கி ஜோடி சேர்ந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். விக்கி தங்கமான பையன் என புகழ்ந்து இருக்கிறார். இவை எல்லாவறையும் தாண்டி, நயன்தாரா விக்கியை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா. விஜய் டிவியில் டிடி நடத்திய நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட நயன், “ விக்கியை எனக்கு 7 வருடமாக தெரியும். என் கெரியருக்கு அவ்வளவு சப்போர்ட் செய்வார். பாசமாக பார்த்து கொள்வார் . குறிப்பாக அவரின் அம்மா, தங்கையை விக்கி பார்த்துக் கொள்ளும் விதம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பெண்களை மதிக்ககூடிய நல்ல மனிதர்” என்று வெட்கத்துடன் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Director vignesh shivan, Kollywood, Nayanthara, Tamil Cinema