ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போயஸ் கார்டனில் குடியேறப்போகும் நயன்தாரா.. என்ன காரணம்?

போயஸ் கார்டனில் குடியேறப்போகும் நயன்தாரா.. என்ன காரணம்?

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளை புக் செய்துள்ளார். இரண்டும் 4BHK குடியிருப்புகள் ஆகும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் எழும்பூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு வாங்கியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக வீடு வாங்கும் எண்ணத்தில் இருந்த நயன்தாரா, போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் அபார்ட்மென்ட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் அப்பார்ட்மெண்ட் அவருக்கு பிடித்துப்போகவே, கட்டாயம் அங்கு வீடு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

  இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அப்பார்ட்மெண்ட்டுகளை புக் செய்துள்ளார். இரண்டும் 4BHK குடியிருப்புகள் ஆகும். மேலும் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்ட பிறகு ஒரு நல்ல நாளில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த பிறகு போயஸ் கார்டன் வீட்டில் குடியேறப்போவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. இதுதவிர, ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் நயன்தாரா அறிமுகமாகிறார்.

  அந்த வகையில் தனது தற்போதைய படங்களுக்கான வேலைகளை முடித்தவுடன் தனது காதலர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, திருமணம் முடிந்த கையோடு இருவரும் போயஸ் கார்டன் வீட்டில் குடியேரும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறது திரையுலக வட்டாரம். ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது மாமனார் வீட்டிற்கு அருகிலேயே மிக பிரமாண்டமாக வீடு கட்டி வருகிறார். அதன்படி ரஜினிகாந்த், தனுஷ் போன்ற நட்சத்திரங்கள் வசிக்கும் சென்னை போயஸ் கார்டனில் நயன்தாராவும் நுழைகிறார்.

  நயன்தாரா சமீபத்தில் தான் தனது 37-வது பிறந்தநாளைக் கோலாகலமாக கொண்டாடினார். நயன்தாரா தனது பிறந்தநாளை தனது காதலனும் பட இயக்குநருமான விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோருடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பில் கொண்டாடினார். மேலும், கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வைரலாக பரவியது. அதோடு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பிக்பாஸ் எவிக்‌ஷன் : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்!

  நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Nayanthara