முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நயன்தாராவின் திருமண பரிசாக அமையுமா O2 திரைப்படம்?

நயன்தாராவின் திருமண பரிசாக அமையுமா O2 திரைப்படம்?

நயன்தாரா

நயன்தாரா

திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய நடிப்பில் வெளியாகும் O2 திரைப்படம் தனக்கு திருமண பரிசாக அமையும் என நயன்தாரா எதிர்பார்க்கிறார். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திருமணத்திற்கு பிறகு வெளியாகும் தன்னுடைய ஓ2 (O2)  திரைப்படம் வெற்றியடையும் என நயன்தாரா எதிர்பார்த்திருக்கிறார். 

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ள திரைப்படம் O2. இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி நேரடியா ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

இயற்கை மாற்றத்தால் எதிர்பாராதவிதமாக பூமிக்கடியில் ஒரு பேருந்து மாட்டிக்கொள்கிறது.  அதில் இருக்கும் பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஓ2 திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் மகனாக YouTube வீடியோவால் பிரபலமான ரித்விக் என்ற சிறுவன் நடித்துள்ளார்.  அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை வரும் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடுகின்றனர்.  இந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வெளியாகும் இந்த திரைப்படம் தனக்கு வெற்றியாக அமையும் என நயன்தாரா எதிர்பார்த்திருக்கிறார்.

Also read... 16 வயதினிலே படத்தில் கமல், ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இரண்டாம் பாடல் இன்று ஐந்து மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara