ஊசியில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா - நெட்டிசன்கள் கேள்வி

நயன்தாரா

எல்லோரும் இடது கையில் ஊசி போட்டுக் கொள்ள, நயன்தாரா மட்டும் வலது கையில் தடுப்பூசி போட்டிருந்தார்.

 • Share this:
  ஊசியே இல்லாமல் நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

  இதையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு சமூக வலைதலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.  எல்லோரும் இடது கையில் ஊசி போட்டுக் கொள்ள, நயன்தாரா மட்டும் வலது கையில் தடுப்பூசி போட்டிருந்தார். அதோடு அந்தப் படத்தில் ஊசி போடும் செவிலியர் கையில் ஊசியே இல்லாது போல் தெரிந்தது. இதனால் ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

  ஆனால் செவிலியரின் உள்ளங்கையில் ஊசி இருந்திருக்கலாம் எனவும், படத்தில் அது தெரியாமல் இருக்கிறது எனவும் நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தவிர ஊசி போட்டு விட்டு, பின்னர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த படம் தான் இது எனவும் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: