நயன்தாரா நடித்திருக்கும் மலையாள கோல்ட் படத்தின் டீஸர் யூடியூப் பார்வையில் புதிய சாதனை படைத்துள்ளது.
பிரேமம் வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பல வருட இடைவெளிக்குப் பிறகு கோல்ட் என்ற படத்தை அறிவித்தார். அப்போதே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிருத்விராஜ், நயன்தாரா கோல்டில் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். சில மாதங்களில் படப்பிடிப்பை முழுமையாக நடத்தி நிறைவு செய்தார் அல்போன்ஸ் புத்திரன். இதன் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது.
டீஸர் வெளியான 20 மணி நேரத்தில் 5 மில்லியின் - அதாவது 50 லட்சம் பேர் இந்த டீஸரை பார்த்துள்ளனர். மலையாளப்பட டீஸர் ஒன்று குறுகிய காலத்தில் இத்தனை பார்வைகளை பெறுவது இதுவே முதல்முறை. அந்தவகையில் டீஸரிலேயே கோல்ட் சாதனை படைத்துள்ளது.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
கோல்டில் பிருத்விராஜின் கதாபாத்திரப் பெயர் ஜோஷி. நயன்தாரா இதில் சுமங்கலி உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீஸரில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று கௌரவப்படுத்தியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இவர்களுடன் லாலு அலெக்ஸ், வினய் போர்ட், செம்பன் வினோத், பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன், சாந்தி கிருஷ்ணா, பாபுராஜ் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
சகோதரிகள் அணி... கவனம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செளந்தர்யா ரஜினிகாந்த் படம்!
பிருத்விராஜும், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸடீபனும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். விரைவில் படவெளியீட்டை அறிவிக்க இருக்கிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.