கடைசி நாளில் படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!

எம்.ராஜேஷ்- சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: February 9, 2019, 7:40 PM IST
கடைசி நாளில் படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!
நயன்தாரா
news18
Updated: February 9, 2019, 7:40 PM IST
மிஸ்டர்.லோக்கல் படக்குழுவினருக்கு நடிகை நயன்தாரா பரிசுப்பொருள் கொடுத்து அசத்தியுள்ளார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாராவின் காட்சிகள் கடந்த 6-ம் தேதி படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கடைசிநாள் படப்பிடிப்பின்போது தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார் நயன்தாரா.


Loading...


சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் வழக்கம்போல் இயக்குநர் ராஜேஷின் ஸ்டைலில் கையில் டீ டம்ளருடன் கோட் சூட் அணிந்து தோன்றியிருந்தார் சிவகார்த்திகேயன். இயக்குநர் எம்.ராஜேஷ்- சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரமற்ற ஆவணங்கள் வெளியிடுவதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு - வீடியோ

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...