ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா நடிக்கும் O2 படத்தின் புதிய அப்டேட்!

நயன்தாரா நடிக்கும் O2 படத்தின் புதிய அப்டேட்!

நயன்தாரா

நயன்தாரா

இந்த வருடம் நயன்தாராவின் அடுத்த நாயகி மையப்படமான நெற்றிக்கண் நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நயன்தாரா நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாக உள்ளது. பிப்ரவரியில் படம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் படம் O2 (ஆக்சிஜன்).

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கம். இவர் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர். யூடியூப் சேனலில் நிகழ்ச்சி செய்யும் சிறுவன் ரித்விக் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறான்.

2020-ல் நயன்தாரா நடித்த நாயகி மையப்படமான மூக்குத்தி அம்மன் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியானது. படம் பரவலான வரவேற்பை பெற்றது. 2021 இந்த வருடம் நயன்தாராவின் அடுத்த நாயகி மையப்படமான நெற்றிக்கண் நேரடியாக அதே டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது. அடுத்து அவர் நடிக்கும் நாயகி மையப் படம் O2. இந்தப் படத்தையும் நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

O2 படமும் நேரடி ஓடிடி வெளியீட்டைப் பெற்றால் நாயகி மையப் படங்களில் நயன்தாராவின் ஹாட்ரிக் ஓடிடி வெளியீடாக அது இருக்கும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Nayanthara, Tamil Cinema