• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: விஜய் டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அந்த கேள்வி... கதறி அழுத நயன்தாரா

Nayanthara: விஜய் டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அந்த கேள்வி... கதறி அழுத நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா

தன்னுடைய தந்தை ஏர் ஃபோர்ஸில் அதிகாரியாக இருந்தவர் என்றும், அதனால் அவரை எப்போதுமே ஒரு ஹீரோவாக தான் அவரை பார்த்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் தன் தந்தை குறித்து பேசுகையில் குரல் தழுதழுத்த நயன்தாரா, உடைந்து அழுதிருக்கிறார்.

    ‘நயன்தாரா’ நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், பார்வையற்றவராக நடித்திருக்கிறார் நயன்தாரா.

    இதையடுத்து நெற்றிக்கண் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியாக ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ எனும் நிகழ்ச்சி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. டிடி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, நிச்சயதார்த்த மோதிரத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், டைம் மிஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி நயன்தாராவிடம் கேட்கப்பட்டது.



    அதற்கு பதிலளித்த நயன்தாரா, தன்னுடைய தந்தை ஏர் ஃபோர்ஸில் அதிகாரியாக இருந்தவர் என்றும், அதனால் அவரை எப்போதுமே ஒரு ஹீரோவாக தான் பார்த்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 12, 13 வருடங்களாக அவரது உடல்நிலை சரியில்லை எனவும், இப்போது அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கண்கலங்கி கூறியுள்ளார்.

    அதனால் டைம் மெஷின் கிடைத்தால், தன் தந்தையை, ஆரம்பத்தில் இருந்தது போலவே, உடல்நலனை சீர் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வந்துவிட்டால் தனக்கு மிகவும் சந்தோஷம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: