ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் தரும் பிறந்தநாள் ட்ரீட்!

நயன்தாரா ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் தரும் பிறந்தநாள் ட்ரீட்!

குடும்பத்துடன் நயன்தாரா

குடும்பத்துடன் நயன்தாரா

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அஸ்வின் சரவண் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகை நயன்தாரா நவம்பர் 18-ஆம் தேதி தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் அவருக்கு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தனது நீண்டகால காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, அக்டோபர் 9-ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் இரட்டை மகன்களைப் பெற்றார்.

    இதற்கிடையே நயன்தாரா மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக, அவர் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர், வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அஸ்வின் சரவண் இயக்கியுள்ளார்.

    'கனெக்ட்' படத்திற்கு பிருத்வி இசையும், மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, அனுபம் கெர், ஹனியா நபீசா, சத்யராஜ், வினய் ராய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு திடீர் விசிட் செய்த காஜல்!

    முன்னதாக நயன் மற்றும் விக்கி இருவரும் தங்கள் நெருங்கிய நண்பர் வீட்டில் பார்ட்டியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தவிர நயன்தாரா தற்போது, 'லேடி சூப்பர் ஸ்டார் 75', 'ஜவான்' மற்றும் 'இறைவன்' ஆகியப் படங்களில் நடித்து வருவதால், இந்த படங்களின் அப்டேட்டுகள் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara