தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு நயன்தாரா அறிமுகமாகியிருக்கிறார்.
ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக சில தினங்களாக செய்திகள் வலம் வந்தன. ஆமாம் அந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அல்ல. குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த, நயன்தாரா சக்ரவர்த்தி! அவர் ஜென்டில்மேன் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கிறார்.
நயன்தாரா மலையாள சினிமாவில் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அவரது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். ஆனால் படிப்பை தொடர வேண்டிய காரணத்தால், சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நயன், ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஜென்டில்மேன் 2 என்பது ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தில் அர்ஜுன் மற்றும் மது முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
சகோதரிகள் அணி... கவனம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செளந்தர்யா ரஜினிகாந்த் படம்!
சுமார் 30 ஆண்டுகள் கழித்து தற்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளார் கே.டி.குஞ்சுமோன். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் யாருமல்லாமல், புதிய கூட்டணியை வைத்து இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக எம்.எம்.கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.