காதலருடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள்

நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

 • Share this:
  நயன்தாரா நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.

  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது வெளிநாடு செல்வது, தனி ஜெட்டில் பயணிப்பது என்று இந்த காதல் ஜோடிகளின் கதைகள் அவ்வப்போது செய்திகளில் வெளியாகும். சமீபத்தில் தந்தைக்கு உடல்நலமில்லாததால் கேரளாவுக்கு தனது காதலருடன் சென்றார் நயன்தாரா.

  தற்போது அல்போன்ஸ் புத்திரனின் கோல்ட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ளார் நயன்தாரா. முழுவீச்சில் கோல்ட் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அம்மாவுடன் தானும், விக்னேஷ் சிவனும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Nayanthara celebrates her mom's birthday with Vignesh Shivan, nayanthara vignesh shivan, nayanthra vignesh shivan latest picture, nayanthara latest image, vignesh shivan latest image, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா லேட்டஸ்ட் படம், நயன்தாரா விக்னேஷ் சிவன் படம், kaathu vaakula rendu kaadhal, காத்து வாக்குல ரெண்டு காதல்
  தனது அம்மாவுடன் நயன்தாரா


  நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அத்துடன் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்திலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: