Home /News /entertainment /

Nayanthara: கற்பிதங்களை கட்டுடைத்த நயன்தாரா!

Nayanthara: கற்பிதங்களை கட்டுடைத்த நயன்தாரா!

நயன்தாரா

நயன்தாரா

Happy Birthday Nayanthara : ஏற்கனவே இரண்டு முறை காதல் தேர்வில் தோல்வி, அதிலிருந்து மீண்டு தனது தொழில் வாழ்க்கையை நேர்த்தியாக மாற்றிய பின்பு, வீட்டில் சொல்வதை கேட்பது தானே நல்ல பெண்ணுக்கு அழகு? ஆனால் நயன்தாரா இதையும் உடைத்தார்.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக் கணக்கான நடிகைகள் புதிதாக அறிமுகமாகிறார்கள். நடிப்பதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இவர்களிடம் இருந்தாலும், அதில் வெகு சிலரால் மட்டுமே ரசிகர்களின் அன்பைப் பெற்று வெற்றிக்கொடி நாட்ட முடிகிறது.

நடிப்பைப் பொறுத்தவரை ஒருவர் உச்ச நட்சத்திரமாவதற்கு அவரின் நடிப்பை மட்டும் குறிப்பிட முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எந்த மாதிரியான குண நலனைக் கொண்டவர், பிரச்னைகளை அவர் எதிர்க்கொள்ளும் விதம், தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தை அவர் எப்படி இன்னும் மெருகேற்றிக் கொள்கிறார் என அதன் காரணங்களை பட்டியலிடலாம். இந்த வரையறைக்குள் மிக முக்கியமானவராக மிளிர்கிறார் நடிகை நயன்தாரா.

நாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம், அதுவும் விதவிதமான கதைகளத்தில். சில கதைகள் நம்மை உலுக்கும், சில கதைகள் நம் மனதை லேசாக்கும். இன்னும் சில படங்களோ தொண்டைக்கும் வாய்க்கும் இடையே சிக்கி, நம்மை விம்மி விம்மி உள்ளுக்குள் அழ வைக்கும்.

கதைகளைப் போல சில கதாபாத்திரங்களையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் சில பாத்திரங்கள் நம்மைப் போலவும், இன்னும் சில நம் பக்கத்து வீட்டு நபர் போன்று மிக இயல்பாகவும் படைக்கப்பட்டிருக்கும். வேறு சில பாத்திரங்களோ, நம்மால் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாததை, திரையில் செய்துக் காட்டி நம்மை நெகிழ வைக்கும்.

அப்படியான ஒரு நடிகை / கதாபாத்திரம் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்? காரணம் அவரது திரை வாழ்க்கை மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையும் இதற்கு முக்கியமான காரணம்.

nayanthara husband name, nayanthara husband, நயன்தாரா, நயன்தாரா பிறந்தநாள், நயன்தாரா விக்னேஷ் சிவன், நயன்தாரா வயது, nayanthara family, nayanthara age, nayanthara instagram, nayanthara twitter, nayanthara new photos, nayanthara marriage date, nayanthara birthday, nayanthara birthday photos, nayanthara birthday wishes, nayanthara birthday song, nayanthara relationships, nayanthara real name, nayanthara vignesh shivan, happy birthday nayanthara, நயன்தாரா குடும்பம், நயன்தாரா திருமணம், நயன்தாரா சிம்பு, நயன்தாரா படங்கள், நயன்தாரா திருமண தேதி
நயன்தாரா

நிஜத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் கூட ஒரு பெண் தனது விருப்பங்களையோ, வாழ்க்கை சார்ந்த தனது முடிவுகளையோ தானே எடுத்து விட முடியாத சூழல் தான் இன்றும் நிலவுகிறது. சினிமாவில் காதலில் தோல்வியுற்ற ஹீரோ தண்ணீரில் மிதக்கும் மீனைப் போல மதுவில் மூழ்கி, நுரையீரலே அவனிடம் கெஞ்சும் அளவுக்கு சிகரெட்டுகளை புகைத்து தனது மனவலியை தீர்த்துக் கொள்வான். பின்னர் அடுத்த காதல்... ஒருவேளை அதுவும் தோல்வியில் முடிந்தால் இன்னொரு காதல் அல்லது வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு அவளை காதலிப்பது போல் படங்களில் எளிதில் காட்டி விட முடிகிறது. ஆனால் ஒரு பெண்ணை கதாபாத்திரத்தமாகக் கூட இப்படி காட்ட முடிவதில்லை.

சினிமாவில் ஒரு காதல் தோல்வியில் முடிந்தால் பெரும்பாலும் அதற்கு பெண் தான் காரணமாக இருப்பாள். இரண்டாவது காதல் அவளுக்கு இருக்கவே கூடாது. நேரடியாக வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொண்டு, குடும்ப கெளரவத்தை காப்பாற்ற வேண்டும். நிஜ வாழ்க்கையிலும் கூட, பெண் அவள் சொந்த விருப்பு வெறுப்புகளை சமூகத்துக்காக (ஊரில் நான்கு பேர் நான்கு விதமாக பேசுபவர்கள்) விட்டுக்கொடுக்கும் சூழல் தான் இன்றும் உள்ளது.

nayanthara husband name, nayanthara husband, நயன்தாரா, நயன்தாரா பிறந்தநாள், நயன்தாரா விக்னேஷ் சிவன், நயன்தாரா வயது, nayanthara family, nayanthara age, nayanthara instagram, nayanthara twitter, nayanthara new photos, nayanthara marriage date, nayanthara birthday, nayanthara birthday photos, nayanthara birthday wishes, nayanthara birthday song, nayanthara relationships, nayanthara real name, nayanthara vignesh shivan, happy birthday nayanthara, நயன்தாரா குடும்பம், நயன்தாரா திருமணம், நயன்தாரா சிம்பு, நயன்தாரா படங்கள், நயன்தாரா திருமண தேதி
நயன்தாரா

ஆனால் இந்த கற்பிதங்களை எல்லாம் நிஜ வாழ்க்கையில் தகர்த்தெரிந்தவர் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின் பிரபுதேவாவுடன் உறவிலிருந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்துக் கொண்டு இல்வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். ஒருவேளை அது நடந்திருந்தால், நயன்தாராவை இன்று எத்தனைப் பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. அதற்கு முன்பு அவர் வழக்கமான நடிகைகளைப் போன்றே கருதப்பட்டார். அவரது படங்களும் கூட அதே ரகம் தான்.

ஆனால் பிரபுதேவா - நயன்தாரா திருமணத்தில் கைகூடாமல் முறிந்துப் போக, துவண்டு விடாமல், ’ராஜா ராணி’ திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார் நயன். இவ்வளவு பிரச்னைக்குப் பிறகும் நடிக்க வந்திருக்கிறாரே, நீடிப்பாரா? என்ற எண்ணம் பலரது மனதிலும் இருந்தது. அதையெல்லாம் தனது அடுத்தடுத்தப் படங்களில் தவிடு பொடியாக்கிக் கொண்டே இருந்தார்.

முன்பை விட மிக அதிகமான படங்களில் நடித்து, தனது மறு முகத்தைக் காட்டினார். பொதுவாக ‘ரீ எண்ட்ரி’, ‘கம்பேக்’ எல்லாம் அனைவருக்கும் ஒர்க் அவுட் ஆகிவிடாது. அப்படியே ஆனாலும் அதை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் நயன்தாரா மிக கவனமாக தனது கரியரை நிலை நிறுத்திக் கொண்டார்.

nayanthara husband name, nayanthara husband, நயன்தாரா, நயன்தாரா பிறந்தநாள், நயன்தாரா விக்னேஷ் சிவன், நயன்தாரா வயது, nayanthara family, nayanthara age, nayanthara instagram, nayanthara twitter, nayanthara new photos, nayanthara marriage date, nayanthara birthday, nayanthara birthday photos, nayanthara birthday wishes, nayanthara birthday song, nayanthara relationships, nayanthara real name, nayanthara vignesh shivan, happy birthday nayanthara, நயன்தாரா குடும்பம், நயன்தாரா திருமணம், நயன்தாரா சிம்பு, நயன்தாரா படங்கள், நயன்தாரா திருமண தேதி
நயன்தாரா

ஏற்கனவே இரண்டு முறை காதல் தேர்வில் தோல்வி, அதிலிருந்து மீண்டு தனது தொழில் வாழ்க்கையை நேர்த்தியாக மாற்றிய பின்பு, வீட்டில் சொல்வதை கேட்பது தானே நல்ல பெண்ணுக்கு அழகு? ஆனால் நயன்தாரா இதையும் உடைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் படங்களில் கவனம் செலுத்திக் கொண்டே விக்னேஷ் சிவனுடனான காதலிலும் கவனம் செலுத்தினார். இருவரும் காதல் பறவைகளாக வெளியிடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்களை பதிவிட்டு மற்றவர்களுக்கு ‘கப்புள் கோல்ஸை’ நிர்ணயித்தனர். தங்களுக்கு நிச்சயதர்த்தம் முடிந்துவிட்டதாக சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் நயன்தாரா.

எத்தனை பிரச்னைகளை சந்தித்தாலும், அதை துணிச்சலுடன் எதிர் கொண்டு, தனது படங்களின் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நயன், பல பெண்களுக்கு முன்னுதாரணம். புறம் பேசுபவர்களை சட்டை செய்யாமல், தனக்குப் பிடித்த வழியில் வாழ்க்கையை வாழும் நயன்தாராவுக்கு நியூஸ்18 தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Hbdnayanthara, Nayanthara

அடுத்த செய்தி