• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayanthara: விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, சமந்தாவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா

Nayanthara: விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, சமந்தாவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா

நயன் பிறந்தநாள்

நயன் பிறந்தநாள்

Happy Birthday Mol என பர்த்டே பலூனிலும் கேக்கிலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருந்தார்.

  • Share this:
    நயன்தாராவின் பிறந்தநாளை கோலகலமாகக் கொண்டாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

    ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் அவரின் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அதில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விக்னேஷ் சிவனின் புதிய படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

    இதற்கிடையே இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்.

    அப்போது Nayan, லேடி சூப்பர் ஸ்டார் என்று எழுதப்பட்ட இரண்டு கேக்குளை வெட்டியிருக்கிறார் நயன்தாரா. Happy Birthday Mol என பர்த்டே பலூனிலும் கேக்கிலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருந்தார். இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா ஆகியோரும் இருந்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)










    வழக்கமாக தங்கமே என நயன்தாராவை குறிப்பிடும் விக்கி, இந்த முறை கண்மணி, தங்கமே மற்றும் எனக்கு எல்லாமே எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: