கனெக்ட் திரைப்படத்தின் பிரிவியூ காட்சியில் கணவர் விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா கலந்து கொண்டார்.
மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கனெக்ட். இந்த திரைப்படத்தை தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா தயாரித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஒரு திகில் நிறைந்த சம்பவத்தை மையமாக வைத்து கனெக்ட் திரைப்படத்தை எடுத்துள்ளனர். தன் மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது படம். வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரிவியூ காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் கலந்து கொண்டார்.
நயன்தாரா தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் இந்த திரைப்படத்தின் பிரிவியூ காட்சிக்கு அவர் வந்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
கணவனுடன் திரையரங்கில் உள்ளிருந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் நயன்தாராவை பார்த்து 'லவ் யூ மேம்' எனக்கத்தினர்.
Also read... நடிகை கியாரா அத்வானியின் அசத்தல் ஃபோட்டோஸ்!
கனெக்ட் திரைப்படம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒலி கலவை (Sound Mixing) படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் மாயா படம் போல தனக்கு வெற்றியை கொடுக்கும் என நயன்தாரா எதிர்பார்த்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.