ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு

ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு

நயன்தாரா - த்ரிஷா

நயன்தாரா - த்ரிஷா

கோலிவுட் ராணிகளாக வலம் வரும் இருவருமே விரைவில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோலிவுட் ராணிகள்..

  கோலிவுட்டில் தங்களுக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகைகள் லிஸ்டில் முக்கிய டாப்பில் இருப்பவர்கள் நயன் தாராவும், த்ரிஷாவும். நடிகைகள் என்றாலே வருவார்கள் நடிப்பார்கள் பின்னர் காணாமல் போய்விடுவார்கள் என்ற பொதுவிதியை உடைத்தவர்களில் இவர்கள் இருவருமே முக்கியமானவர்கள். முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மட்டுமின்றி நாயகிகளை முன்னிறுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.

  குறிப்பாக நயன் தாரா தனி ட்ராக்கையே உருவாக்கியுள்ளார். அதேபோல் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அதிக கவனம் பெற்றார் த்ரிஷா. அமைதி, பார்வையில் ஒரு தைரியம் என குந்தவை கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தி இருந்தார். இப்படியாக கோலிவுட் ராணிகளாக வலம் வரும் இருவருமே விரைவில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

  காத்து வாக்குல

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா நடித்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இரண்டு முக்கிய நாயகிகளை மையப்படுத்தி உருவான இப்படத்தில் சமந்தா கேரக்டரில் த்ரிஷா நடிப்பதாகவே இருந்தது. ஆனால் கால்ஷூட் பிரச்னையால் சமந்தா ஒப்பந்தமானதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நயன் த்ரிஷா இணையும் வாய்ப்பு வந்துள்ளது

  Also Read:  நடிகர் அர்னாவ் வாழ்க்கையில் நடந்த சோகம்! சீரியல் கதையும் நிஜ வாழ்க்கையும் ஒன்றே

  ராம்..

  த்ரிஷ்யம் புகழ் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் திரைப்படம் ராம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். லண்டனில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நயனையும் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

  த்ரிஷா - நயன்தாரா

  ராம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ள நிலையில் முதல் பாகத்தில் க்ளைமேக்ஸில் நயன் தாரா படத்தில் ஒரு கதாபாத்திரமாக இணைவார் என்றும். செகண்ட் பார்ட்டில் அதிக போர்ஷன் நயன் தாரா இருப்பார் என்றும் அதற்கான திரைக்கதை ரெடியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தற்போது நயன் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actress Trisha, Nayanthara