ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nayanthara: மெளனம் கலைத்த நயன்தாரா... நிச்சயதார்த்தத்தை ஒப்புக்கொண்ட வீடியோ!

Nayanthara: மெளனம் கலைத்த நயன்தாரா... நிச்சயதார்த்தத்தை ஒப்புக்கொண்ட வீடியோ!

நயன்தாரா

நயன்தாரா

புரொமோஷன் நிகழ்ச்சியாக ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார்.

  முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவுக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி அவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா தற்போது நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதில் நெற்றிக்கண் நாயகி மையப்படம். இதில் நயன்தாரா கண் பார்வையற்றவராக நடித்திருக்கிறார்.

  நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராய் இயக்க, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 13-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியாக ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.


  டிடி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துக் கொள்கிறார். அதோடு அவரின் ரசிகைகளும் கலந்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் நயன்தாரா கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து டிடி கேட்க, ‘இது என்கேஜ்மெண்ட் ரிங்’ என்கிறார் நயன்தாரா. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Nayanthara