முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'என் குழந்தையே இல்ல...' - நிராகரித்த 'பேட்ட' வில்லன் - மரபணு சோதனை கோரிய மனைவி - பரபரப்பு தகவல்

'என் குழந்தையே இல்ல...' - நிராகரித்த 'பேட்ட' வில்லன் - மரபணு சோதனை கோரிய மனைவி - பரபரப்பு தகவல்

நவாசுதீன் சித்திக்

நவாசுதீன் சித்திக்

ஆலியா சித்திக் நீதிமன்றத்தில் தனக்கும் நவாசுதீனுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை நவாசுதீன் ஏற்க மறுப்பதாகவும் அதனால் தனது குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் சிங்காரம் என்ற வேடத்தில் வில்லனாக மிரட்டியவர் நவாசுதீன் சித்திக். நடிகர் கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த நவாசுதீன் சித்திக், அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் நீக்கப்பட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

தான் ஏற்கும் வேடங்களை மிக யதார்த்தமாக கையாள்வதில் வல்லவர் நவாசுதீன் சித்திக். தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் சைந்தவ் எனும் படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து நடித்துவருகிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் தனது மனைவி ஆலியா சித்திக்கை பிரிந்து வாழ்வதாகவும் இருவருக்கும் சொத்து பிரச்னை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நவாசுதீனின் அம்மா மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

Aaliya Siddiqui's advocate says Nawazuddin Siddiqui and family did 'everything possible' to remove actor's wife from the house
மனைவி ஆலியா மற்றும் குழந்தைகளுடன் நவாசுதீன் சித்திக்

அதில், நவாசுதீனின் மனைவி ஜைனப் என்கிற ஆலியா சித்திக் தங்கள் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தன்னை கடுமையாக பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஆலியா சித்திக் நீதிமன்றத்தில் தனக்கும் நவாசுதீனுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை நவாசுதீன் ஏற்க மறுப்பதாகவும் அதனால் தனது குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வந்ததும் நவாசுதீனை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

First published:

Tags: Nawazuddin Siddiqui, Petta