Nawazuddin Siddiqui: கொரோனாவால் விவாகரத்து முடிவு மாற்றம்: மனைவியுடன் இணைந்த ‘பேட்ட’ வில்லன்!

Nawazuddin Siddiqui: கொரோனாவால் விவாகரத்து முடிவு மாற்றம்: மனைவியுடன் இணைந்த ‘பேட்ட’ வில்லன்!

மனைவியுடன் நவாசுதீன்

"முதல் தடவையாக எனக்கு இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது, அதனால் நவாஸின் வேறு பக்கத்தைப் பார்க்க முடிந்தது."

  • Share this:
ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் இவர் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்தாண்டு நவாசுதீனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் ஆலியா. இந்த விஷயம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு, மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி தனது விவாகரத்து வழக்கையும் திரும்பப் பெற்றிருக்கிறார் ஆலியா.

இது குறித்த முன்னணி ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கும் ஆலியா, ”குழந்தைகள் காரணமாக, நாங்கள் இருவரும் மறுபரிசீலனை செய்தோம். இது தவறாக தெரிந்தது, எனவே மீண்டும் முயற்சிக்க நினைத்தோம். குழந்தைகள் பெற்றோர் இருவரின் அன்பையும் பெற வேண்டும், அவர்களும் வளர்ந்து வருகிறார்கள். ஷோரா தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமானவள். அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினம். நாங்கள் அவளிடம் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவளே தெரிந்துக் கொண்டாள். இதனால் ஏற்பட்ட வருத்தம் அவளது படிப்பை பாதித்தது.

சமீபத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நான் உடனடியாக நவாஸை அழைத்தேன். அவர் என்னை பாஸிட்டிவாக அணுகினார். உடனடியாக குழந்தைகளை அழைத்து வர சொல்லி தனது மேலாளரை அனுப்பினார். இப்போது அவர் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார். முதல் தடவையாக எனக்கு இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது, அதனால் நவாஸின் வேறு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. அவர் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அதே வேளையில், படப்பிடிப்புக்கும் செல்கிறார். பின்னர் நானே முன்வந்து பிரச்னைகளைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னேன், அவரும் அவ்வாறே உணர்ந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசினோம். இப்போது எல்லாம் சரியாகி விட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நவாசுதீன் - ஆலியா தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: