‘மெர்சல்’ பட குழந்தை நட்சத்திரத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்

விஜய் மற்றும் நவாசுதீன் சித்திக் உடன் அக்‌ஷத்

குழந்தை நட்சத்திரம் அக்‌ஷத்தை நடிகர் நவாசுதீன் சித்திக் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

 • Share this:
  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக மாறன் என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் அக்‌ஷ்சத் தாஸ். தற்போது சுதிர் மிஸ்ரா இயக்கத்தில் நவாசுதீன் சித்திக் உடன் ‘சீரியஸ் மேன்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.

  அக்டோபர் மாதம் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான ‘சீரியஸ் மேன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தன்னுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் அக்‌ஷத் தாஸ்க்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் நவாசுதீன் சித்திக்.  அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “அக்‌ஷத்தை குழந்தையாக நடத்தக் கூடாது என்பதை அவன் எனக்கு என்றுமே உணர்த்தியிருக்கிறான். இயக்குநரின் பார்வையில் சரியாக விஷயத்தை புரிந்து கொள்ளும் திறமை அவனுக்கு இருக்கிறது. அவனது இந்த குணநலன்கள் என்னை அவன் முன் சரணடைய வைத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: சிம்பு & சுசீந்திரன் கூட்டணி படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  மேலும் படத்தில் அரவிந்த் ஆச்சார்யா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடன் நடித்திருக்கும் நாசர் குறித்து ட்வீட் செய்திருக்கும் நவாசுதீன் சித்திக், “நாசர், அவருடைய நடிப்பில் தனித்துவமான நேர்த்தியைக் கொண்டவர். அவருடைய சிந்தையில் தெளிவு, கதாபாத்திரத்தின் ஈர்ப்பை நிலைநிறுத்தும் திறன், மிகச்சிறிய நுணுங்கங்களையும் தவறவிடாமல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய திறன்தான் அவரை உண்மையானவர் என்று உங்களை நம்பவைக்கிறது.” என்று கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: