ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Navarasa Trailer: 9 கதைகள், 9 உணர்வுகள் - அட்டகாசமான நவரசா ட்ரைலர்!

Navarasa Trailer: 9 கதைகள், 9 உணர்வுகள் - அட்டகாசமான நவரசா ட்ரைலர்!

கிட்டார் கம்பி மேலே நின்று

கிட்டார் கம்பி மேலே நின்று

Navarasa ஆந்தாலஜி படத்தினை கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இயக்குநர் மணிரத்னமும், க்யூப் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஓடிடி பிரபலமடைந்துள்ள நேரத்தில், அதில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘நவரசா’ ஆந்தாலஜி தயாராகியுள்ளது. ஒன்பது பேர், ஒன்பது தனித்தனி கதைகளை இதற்காக இயக்கியுள்ளனர்.

' isDesktop="true" id="515875" youtubeid="Go6O1wX8H-c" category="cinema">

நவரசங்கள் என்பது மனிதனின் ஒன்பது உணர்வுகளை குறிப்பது. இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படங்களை ஒன்பது பேர் இயக்கியுள்ளனர். அதன் தொகுப்பே நவரசா ஆந்தாலஜி. கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், அஞ்சலி, அதர்வா, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, டெல்லி கணேஷ், ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதையடுத்து நவரசா ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya, Actor Vijay Sethupathi, Goutham menon, Mani ratnam