முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கமல் ஹாசனின் இந்தியன் 2-வில் நவரச நாயகன் கார்த்திக்?

கமல் ஹாசனின் இந்தியன் 2-வில் நவரச நாயகன் கார்த்திக்?

கார்த்திக் - கமல் ஹாசன்

கார்த்திக் - கமல் ஹாசன்

கார்த்திக் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Karthikappally

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார். பிப்ரவரி 2020-ல் படப்பிடிப்பில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்திற்குப் பிறகு இந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நவரச நாயகன் கார்த்திக் 'இந்தியன் 2' படத்தில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு நடித்தனர். பாதியிலேயே அவர்கள் இறந்ததால், அவர்களுக்கு மாற்றாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மேற்கூறிய இருவரில் யாராவது ஒருவருக்கு மாற்றாக இருக்கலாம்.

கார்த்திக் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 'இந்தியன் 2' படப்பிடிப்பு செப்டம்பர் 13-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். படத்தில் ​​கமல்ஹாசன் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருப்பதால், இந்தியன் 2 படத்திற்கு தயாராக ஒரு மாத கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 'இந்தியன் 2' படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது.

கணவர் வித்யாசாகர் இழப்பிலிருந்து மீண்ட மீனா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மறுபுறம், இயக்குனர் ஷங்கர், ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடிக்கும் 'RC 15' படத்தின் முக்கிய வேலைகளை முடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    First published:

    Tags: Indian 2, Karthik