நட்டி-பிளாக் ஷீப் நந்தினி நடிக்கும் புதிய படம் துவக்கம்!

நட்டி நட்ராஜ் புதிய படம்

முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 • Share this:
  நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைப்பெற்றது.

  நடிகர் நட்டி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. சைக்கோ திரில்லர் களத்தில் உருவாகும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'ட்ரீம் ஹவுஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 1' தற்காலிகமாக இப்படம் அழைக்கப்படுகிறது

  இந்தப் படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். அதற்கான நாயகிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதோடு படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: