முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு...

தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு...

சூரரைப் போற்று படக்குழு.

சூரரைப் போற்று படக்குழு.

National Film Awards : நாளை சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று அவருக்கு தேசிய அளவில் கவுரம் கிடைத்திருக்கிறது

  • 1-MIN READ
  • Last Updated :

5 தேசிய விருதுகளை வென்றுள்ள சூரரைப் போற்று படக்குழுவுக்கு பாராட்டுக்கள் மழையாய் பொழிந்து வருகிறது. நடிகர்கள் தனுஷ், அக்சய் குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

சிறந்த நடிகர் – சூர்யா

சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி

சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று

சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்

என 5 பிரிவுகளில் சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

நாளை சூர்யா தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில், இதைவிட சிறப்பான பரிசு அவருக்கு அமைந்து விட முடியாது. சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் இந்த திரைப்படம் அவருக்கு தேசிய அளவில் பெருமையை தேடித் தந்துள்ளது.

இதேபோன்று 5 விருதுகளை அள்ளி தமிழகத்திற்கும் சூரரைப் போற்று குழுவினர் பெருமை சேர்த்துள்ளனர். இதையொட்டி படக்குழுவினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் குறிப்பாக சூர்யா சார் எனது இனிய நண்பர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் இன்று மிக முக்கியமான நாள். உங்களால் பெருமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமார் தனது ட்விட்டர் பதிவில், 'தேசிய விருதுகளை சூரரைப் போற்று திரைப்படம் பெற்றிருக்கிறது. எனது சகோதரர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் வாழ்த்துக்கள். சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதை உயர்வானதாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.

First published:

Tags: National Film Awards, Soorarai Pottru