2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது நாளை அறிவிக்கப்படுகிறது. அதில் தமிழில் இருந்து எந்தப் படங்களுக்கு வாய்ப்பு உள்ளது என பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் படங்களை தேர்வு செய்து தேசிய விருதை வழங்கி வருகிறது. சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கபடுகின்றன.
அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு நாளை மாலை அறிவிப்பி வெளியாகிறது.
அந்த வகையில் இந்திய சினிமாவிற்கு 2020ம் ஆண்டு சவாலாக அமைந்தது. அந்த ஆண்டில் சுமார் 8 மாதங்கள் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் ஆண்டின் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா இல்லையா என்ற குழப்பம் நீடித்தது. இதனால் பல படங்கள் வெளியாகவில்லை. குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்கில் வெளியாகின.
2020ம் ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார், உதயநிதியின் சைக்கோ, ஆதியின் நான் சிரித்தால், அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதேபோல் ஆண்டின் இறுதியில் சந்தானத்தின் பிஸ்கோத், புதுமுகங்கள் நடித்த காவல்துறை உங்கள் நண்பன்
போன்ற குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்கில் வெளியாகின.
2020-ம் ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டிருததால் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின் பென்குயின், சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கபெ ரணசிங்கம், ஆர்.ஜே.பாலாஜியின் மூக்கித்தி அம்மன் போன்ற படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகின.
இந்தப் படங்கள் முறையாக தணிக்கை சான்றிதழ் பெற்றிருப்பதால் தேசிய விருதிற்கு விண்ணப்பிக்கலாம். அதில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் கபெ ரணசிங்கம் ஆகிய படங்கள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன.
இந்தப் படங்களை தவிர குணசித்திர் நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம், மற்றும் புதுமுகங்கள் நடித்த காவல் துறை உங்கள் நண்பன் படங்களும் தேசிய விருதிற்கு தமிழில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சூரரைப் போற்று படம் குறைந்த விலையில் விமான டிக்கெட் என்ற முறைக்காக டெக்கான் விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக் வைத்து எடுக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா இயக்கிய அந்தப் படத்துல் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் அத்தனை நேர்த்தியான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கதை, திரைக்கதை, இயக்கம், இசை என அனைத்தும் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.
அதேபோல் தண்ணீர் பிரச்னையுடன் வெளி நாடில் இருந்து போன கணவன் உடலை தமிழகம் கொண்டு வர போராடும் பெண்ணின் வாழ்க்கையை மிக வலியுடன் வலுவாக கபெ ரணசிங்கம் படத்தை எடுத்திருந்தார் விருமாண்டி. அத்துடன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியான நடிப்பில் உருவகப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சூரரைப் போற்று மற்றும் கபெ ரணசிங்கம் படங்கள் தேர்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு பெரிய படங்களை தவிர ஆணவ கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட கன்னிமாடம், அதிகாரத்தால் பாதிக்கப்படும் சாதாரண இளைஞன் வாழ்வை மையப்படுத்திய காவல் துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என கூறப்படுகிறது.
2020ம் ஆண்டுக்கான தேசிய விருதில் நடிகர் சூர்யா, நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ், இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் விருது பெருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood