National Film Awards 2019 | கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது!

National Film Awards 2019 | உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.

news18
Updated: August 9, 2019, 10:40 PM IST
National Film Awards 2019 | கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது!
சிறந்த நடிகை விருது வென்ற கீர்த்தி சுரேஷ்
news18
Updated: August 9, 2019, 10:40 PM IST
66 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன.  

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.

விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். இன்று வெளியிடப்பட்ட விருது வென்றவர்கள் அறிவிப்பில், உத்தரகாண்ட் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.


பாரம் என்ற தமிழ்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கே.ஜி.எப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் படத்த்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த கோரியோகிராபர் விருது பத்மாவத் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாடகருக்கான விருதை பத்மாவத் படத்தின் மிஸிரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த தெலுங்கு மொழி படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடை வடிமைப்பாளர் விருதும் இந்த படத்திற்கே வழங்க்கப்பட்டுள்ளது.

Loading...

சிறந்த பின்னணி இசைக்கான விருது சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய "உரி" படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான விருது ஹிந்தியில் வெளியான உரி படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த சமூக படத்திற்கான விருது அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் வென்றது.

சிறந்த நடிகர்களுக்கான விருது அந்தாதுன் மற்றும் உரி படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது மாகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருது 'பதாய் ஹோ' இந்தி படத்தில் நடித்த சுரேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...