Home /News /entertainment /

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 கிடையாது - எந்த தேதி தெரியுமா?

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 கிடையாது - எந்த தேதி தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16 இல் இருந்து மாற்றப்பட்டுள்ளது. புதிய படங்களின் வருகை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16ஆம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர்.  அவர்களின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்.

இந்த நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.  குறிப்பாக தமிழில் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு,  அருண் விஜய் நடித்த சினம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூர் - அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மஸ்திரா திரைப்படம் வட இந்தியாவில் நல்ல வரவேற்புடன் திரையிடப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் விநியோகஸ்தர்கள் மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா அறிவித்த தேசிய சினிமா தின முடிவை ஏற்கவில்லை. அது புதிய திரைப்படங்களின் வசூலை பெரிதும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதன் காரணமாக தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து,  23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரத்தை கடந்திருக்கும்.  அதேபோல் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் இந்த மாத இறுதியில்தான் வெளியாகின்றன.

Also read... பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது டிஸ்னி ஹாட்ஸ்டார்!

செப்டம்பர் 23ஆம் தேதியில் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டால் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும் என புதிய முடிவை அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதால் பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, இந்த தேசிய சினிமா தினத்தை மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Indian cinema

அடுத்த செய்தி