• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay Sethupathi: 'எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை’ தேசிய விருது வென்ற நடிகர் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: 'எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை’ தேசிய விருது வென்ற நடிகர் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஷில்பா கதா­பாத்­தி­ரம், இந்­த­ள­வுக்குப் பேசப்­படும், விருது கிடைக்­கும் என்ற எதிர் பார்ப்­போடு நான் நடிக்­க­வில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தனக்கு எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என தேசிய விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

    தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

    அதில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதியும் அறிவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு நேற்று டெல்லியில் தேசிய விருது வழங்கப்பட்டது.

    தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன்!

    விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, இதுவே தான் பெறும் முதல் பெரிய விருது என்றும், விருது கிடைக்கும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லை, சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா கதாபாத்திரத்திற்காக இதைப் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

    'பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகினார் ரோஷினி - காரணம் இது தான்!

    தொடர்ந்து பேசிய அவர், “இயக்­கு­நர் தியா­க­ரா­ஜன் குமா­ர­ரா­ஜாவை மட்­டுமே நம்பி, அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன். அவ­ருக்கு இந்தத் தரு­ணத்­தில் என்­னு­டைய முழு நன்­றி­யை­யும் தெரி­விக்க விரும்­பு­கி­றேன். ஷில்பா கதா­பாத்­தி­ரம், இந்­த­ள­வுக்குப் பேசப்­படும், விருது கிடைக்­கும் என்ற எதிர் பார்ப்­போடு நான் நடிக்­க­வில்லை. இயக்­கு­நர் சொன்­னார் என்­ப­தற்­காக, நடித்­தேன். படம் வெளி­யா­ன­வு­டன் மக்­கள் எனது முயற்சி குறித்து என்ன நினைக்­கி­றார்­கள் என்­பதை அறிய ஆவ­லாய் இருந்­தேன். அவர்­கள் ஏற்­றுக்­கொண்­டார்­கள் என்­பதே மிகுந்த மன­நி­றை­வாக இருந்­தது. அவர்­க­ளைத் தொடர்ந்து தற்­போது ஷில்பா­வுக்கு விருது அங்­கீ­கா­ர­மும் கிடைத்­தி­ருப்­ப­தில் இரட்­டிப்பு மகிழ்ச்சி” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: