Dhanush: தனுஷின் நேரடி தெலுங்கு படம் - தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இணைகிறார்!

தனுஷ்

தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

  • Share this:
    தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவன தயாரிப்பில் மூன்று மொழிகளில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். வணிக ரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும். இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

    மறைந்த திருமதி.சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்தப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும். இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: