லோகேஷ் கனகராஜின் விக்ரமில் இணைந்த நரேன்...!

கமல் மற்றும் நரேன்

இதற்கு முன் லோகேஷின் கைதி படத்தில் நரேன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு நல்ல திரைப்படமாக அது அமைந்தது. இப்போது விக்ரமிலும் அவருக்கு லோகேஷ் வாய்ப்பு வழங்கியுள்ளார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் நரேன். இது குறித்து பேசியுள்ள அவர், ஒரு சின்ன ரசிகனின் ஆசை நிறைவேறியுள்ளது என கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காரணம், அதில் நடிக்கும் நட்சத்திரங்கள். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஏற்கனவே விக்ரம் மும்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது நடிகர் நரேனும் படத்தில் இணைந்துள்ளார். இதனை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நடிகனாக வேண்டும் என்ற கனவை ஏற்படுத்திய லெஜென்டுடன் ஒரே படத்தில் நடிப்பதின் மூலம் ஒரு சின்ன ரசிகனின் கனவு நிறைவேறியிருக்கிறது" என்று நரேன் கமலுடன் நடிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.



Also read... காட்ஃபாதர் - விவேக் ஓபராய் நடித்த வேடத்தில் பிரபல மலையாள நடிகர்!

இதற்கு முன் லோகேஷின் கைதி படத்தில் நரேன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு நல்ல திரைப்படமாக அது அமைந்தது. இப்போது விக்ரமிலும் அவருக்கு லோகேஷ் வாய்ப்பு வழங்கியுள்ளார்

விக்ரம் படப்பிடிப்பு அடுத்து காரைக்குடியில் நடக்கிறது. ஆகஸ்ட் 27 முதல் காரைக்குடி படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். அடுத்த வருட கோடையில் படம் திரைக்கு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: