ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நஞ்சியம்மா பாட்டி தமிழுக்கு வந்தாச்சு! கேட்டதுமே மனதில் பதியும் சேவல் பாடல்!

நஞ்சியம்மா பாட்டி தமிழுக்கு வந்தாச்சு! கேட்டதுமே மனதில் பதியும் சேவல் பாடல்!

நஞ்சம்மா பாட்டி

நஞ்சம்மா பாட்டி

சீன் நம்பர் 62 என்ற படத்தில் இடம்பெற்றுள்ள சேவல் பாடலை தற்போது தமிழில் பாடியுள்ளார் நஞ்சம்மா.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அய்யப்பனும் கோஷியும் பட பாடல் மூலம் இசை ரசிகர்களையும் ஈர்த்து தேசிய விருதையும் வென்ற நஞ்சியம்மா பாட்டி. இவர் நஞ்சம்மா என்றும் அழைக்கப்படுகிறார். சேவல் பாட்டு மூலம் கோலிவுட்டில் கால்பதித்துள்ளார்.

  சமீபத்தில் அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் அதிக கவனம் ஈர்த்தவர் நஞ்சம்மா பாட்டி. தன்னுடைய கனீர் குரல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பரவியவர். மலைக்காடுகளில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நஞ்சம்மா டெல்லியில் ஜனாதிபதி கையில் தேசிய விருதை வாங்கி சாதித்தார். மறைந்த மலையாள இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் ''களக்காத்த '' பாடலுக்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

  நஞ்சம்மா

  அட்டப்பாடி காடுகளில் ஆடு மேய்க்கும் நஞ்சம்மா தனது இட்டுக்கட்டில் நாட்டார் பாடல்களை பாடுவதை வழக்கமாக கொண்டவர். அவ்வாறு அவர் சிந்தனையில் உதித்தது தான் ''களக்காத்த சந்தனமேரம் பாடல். தமிழில் வார்த்தைகளும் உச்சரிப்பில் மலையாளமும் கலந்து பாடப்பட்ட “களக்காத்த” பாடல் கொரோனா காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவியது

  Also Read: சூர்யாவை காப்பாற்ற போய் மாரிக்கு வந்த பிரச்சனை - மாரி சீரியல் அப்டேட்!

  அயப்பனும் கோஷியும் படத்தில் பாடுவதற்கு முன்பாகவே சிந்து சாஜன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய அகுடு நாயக என்ற ஆவணப்படத்தில் நஞ்சம்மா ஒருபாடல் பாடியுள்ளார்.

  ' isDesktop="true" id="818190" youtubeid="MEklu2ttqcU" category="cinema">

  இந்நிலையில் சீன் நம்பர் 62 என்ற படத்தில் இடம்பெற்றுள்ள சேவல் பாடலை தற்போது தமிழில் பாடியுள்ளார் நஞ்சம்மா. ஆதாம் என்ற மலையாள படத்தை இயக்கிய சமர் இப்படத்தை இயக்கியுள்ளார். பாடகர் வேல்முருகனுடன் இணைந்து இந்தப்பாடலை பாடியுள்ளார் நஞ்சம்மா. தனக்கே உரித்தான கனீர் குரலால் சேவல் பாடலும் கேட்டதுமே மனதை வருடுகிறது. நஞ்சம்மா பாட்டி இனி தமிழிலும் ஒரு ரவுண்ட் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

  தமிழ் நாடு கேரள எல்லையான அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சியம்மாவுக்கு தாய் மொழி தமிழே. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி கேரள வசம் சென்றது. இதனால், அவர் கேரளவாசி ஆகி விட்டார்.

  Published by:Murugadoss C
  First published: