நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண கொண்டாட்டத்தில் தெலுங்கு நடிகர்கள் நானி மாற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அஜித் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
படங்களில் ஒன்றாக நடித்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டது. இதையடுத்து அவர்களின் திருமணம் நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
முன்னதாக மெஹந்தி, சங்கீத் போன்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடத்தப்பட்டன. மெஹெந்தி சென்னையில் உள்ள நிக்கியின் இல்லத்தில் நடந்தது. அதில் நடிகர்கள் நானி மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் ஆதியும், நிக்கியும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடி மெஹந்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் - டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்
@NameisNani & @sundeepkishan joined and been a part of @AadhiOfficial & @nikkigalrani 's HaldiCeremony ✨💛#Nani #SundeepKishan #Aadhi #AadhiPinnisetty #NikkiGalrani #AadhiNikkiWedding #AadhiWedsNikki pic.twitter.com/NGcIpRdv9j
— Rajesh Kumar Reddy (@rajeshreddyega) May 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தவிர, நடிகர்கள் ஆர்யா, சாயிஷா, மெட்ரோ ஷிரிஷ் உள்ளிட்டோர் ஆதி - நிக்கியின் திருமண பார்ட்டியில் கலந்துக் கொண்டனர். இதையடுத்து நேற்று எளிமையான முறையில் அவர்களின் திருமணம் நடந்தது. அந்தப் படங்களை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor aadhi, Nikki Galrani